கேழ்வரகு இடியாப்ப உப்புமா

width="200"


தேவையானவை:
 
கேழ்வரகு மாவு - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2  
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கடுகு, பெருங்காயத்தூள், உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 ஸ்பூன்
 
செய்முறை:
 
• வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
 
• வெறும் கடாயில் கேழ்வரகு மாவை வறுக்கவும்.
 
• மாவு ஆறிய பின்  எண்ணெய், உப்பு சேர்த்துப் பிசிறவும்.
 
• இதனுடன் கை பொறுக்கும் அளவு சூடான வெந்நீர் விட்டு பிசைந்து இடியாப்ப அச்சில் பிழிந்து, ஆவியில் வேகவிடவும்.
 
• கடாயில் எண்ணெயை காய வைத்து கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்து பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
 
* ஆவியில் வேக வைத்த கேழ்வரகு சேவை, உப்பு சேர்த்துக் கிளறி இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
 
குறிப்பு: விரும்பினால் காய்கறிகள் சேர்த்து வதக்கலாம்.




 
 
Copyright © யாழ் மண்கும்பான்
Blogger Theme by BloggerThemes Design by Diovo.com