கீரை துவையல்

width="200"


தேவையானவை:

முளைக்கீரை - 1 கட்டு
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி 
உளுத்தம் பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன் 
பச்சைமிளகாய் - 2
பூண்டு - 3 பல் 
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு 
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

• கீரை, கொத்தமல்லியை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் உளுத்தம்பருப்பைப் போட்டு, பொன்னிறமாக வறுக்கவும். அதனுடன் கீறிய பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

• பிறகு அதில் கீரையை சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து கிளறி மூடவும். குறைந்த தீயில் கீரை வெந்ததும் கொத்தமல்லி சேர்த்துக் கிளறி இறக்கவும்.

• ஆறியதும் அவற்றுடன் புளி, உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு நைஸாக அரைக்கவும்.

• இந்தத் துவையல் மிகவும் ஆரோக்கியமானது.

குறிப்பு...


• சிறுகீரை (அ) அரைக்கீரையையும் பயன்படுத்தலாம்.




 
 
Copyright © யாழ் மண்கும்பான்
Blogger Theme by BloggerThemes Design by Diovo.com