காய்கறி தயிர் பச்சடி

width="200"

தேவையான பொருட்கள்:

வெள்ளரிக்காய் – 1

பெரிய வெங்காயம் – 1    

தக்காளி – 1    

கேரட் – 1    

கொத்தமல்லி இலை – சிறிது

பச்சைமிளகாய் – 2    

உப்பு – 1/2 டீஸ்பூன் அல்லது ருசிக்கேற்றவாறு    

தயிர் – ஒரு கப்

செய்முறை:    

• வெள்ளரியின் தோல் மற்றும் விதைப்பகுதியை நீக்கி விட்டு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

• கேரட்டின் தோலை சீவி விட்டு, வெள்ளரித்துண்டின் அளவிற்கு பொடியாக வெட்டிக் கொள்ளவும்.

• தக்காளியை இரண்டாக வெட்டி, அதனுள் இருக்கும் விதை மற்றும் சாறு ஆகியவற்றை நீக்கி விட்டு மற்ற காய்களின் அளவிற்கு வெட்டிக் கொள்ளவும்.

• பச்சை மிளகாயைக் கீறி விதையை நீக்கி விட்டு பொடியாக நறுக்கவும்.

• கொத்தமல்லியையும், வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.    

• தயிரை நன்றாகக் கடைந்து அத்துடன் உப்பு சேர்த்துக் கலக்கவும். கடைந்த தயிரை ஒரு பாத்திரந்தில் ஊற்றி அதில் நறுக்கி வைத்துள்ள எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும்.

• சுவையான தயிர் பச்சடி தயார்.




 
 
Copyright © யாழ் மண்கும்பான்
Blogger Theme by BloggerThemes Design by Diovo.com