தேவையானவை:
நெல்லிக்காய் - 4
மோர் - ஒரு கப்
உப்பு, பெருங்காயம் - தேவையான அளவு.
செய்முறை:
* நெல்லிக்காயின் கொட்டையை நீக்கிவிட்டு, பொடியாக நறுக்கி, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
• இதனுடன் பெருங்காயம், மோர் சேர்த்துக் கலக்கி, குளிர வைத்து பருகலாம்.
குறிப்பு: வைட்டமின் 'சி' நிறைந்த இந்த எனர்ஜி டிரிங், வயதானவர்களுக்கு மிகவும் ஏற்றது.