கோதுமை ரவா இட்லி

width="200"

தேவையான பொருட்கள்:-
 
 
கோதுமை ரவா- 1 கப்.
தயிர் – 1 1/2 கப்.
கடுகு- 1 தேக்கரண்டி.
உளுந்தம் பருப்பு- 1 தேக்கரண்டி.
கடலைப் பருப்பு- 1 தேக்கரண்டி.
பச்சை மிளகாய்-1.
கொத்தமல்லி, கறிவேப்பிலை- சிறிது.
உப்பு– தேவையான அளவு.
எண்ணெய்- 1 ஸ்பூன்.
 
செய்முறை:-
 
* கோதுமை ரவையையும், தயிரையும் கலந்து 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
 
* பின் சிறிது எண்ணெயில் கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, அதை ரவை கலவையில் கொட்டவும்.
 
* தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
 
* இந்த கலவையை இட்லி பாத்திரத்தில் இட்லியாக ஊற்றி ஆவியில் வேக வைக்கவும். இதற்கு சரியான காம்பினேஷன் மிளகாய் துவையல் மற்றும் தேங்காய் சட்னியாகும்.





 
 
Copyright © யாழ் மண்கும்பான்
Blogger Theme by BloggerThemes Design by Diovo.com