மேங்கோ, நிலக்கடலை சாலட்

width="200"


தேவையான பொருட்கள்:

பொடியாக நறுக்கிய மாங்காய் - 1 கப்
பச்சை மிளகாய்- 1
வெங்காயம் - 1
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிது
நிலக்கடலை - 1/4 கப்
வெண்ணெய் - 2ஸ்பூன்
தேன் - 1 ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு.

செய்முறை:

• வெண்ணெயில் நிலக்கடலையை வருத்து ஆற வைக்கவும்.

• வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• ஒரு பாத்திரத்தில் நறுக்கிய மங்காய்த்துண்டுகளுடன், வெங்காயம் பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு கலந்து நிலக்கடலை, உப்பை சேர்க்கவும்.

• கடைசியாக கொத்தமல்லித்தழை, தேன் சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்




 
 
Copyright © யாழ் மண்கும்பான்
Blogger Theme by BloggerThemes Design by Diovo.com