வேப்பம்பூ பச்சடி

width="200"


தேவையான பொருட்கள்:
 
வேப்பம்பூ - 50 கிராம்
புளி - சிறிய எலுமிச்சை அளவு
வெல்லம் - 1 மேஜைக்கரண்டி
கடுகு, காய்ந்த மிளகாய் - தாளிக்க
எண்ணெய் - ஒரு ஸ்பூன்
 
செய்முறை:
 
• புளியை கரைத்து அதனுடன் வெல்லம் கலந்து கொதிக்க வைக்க வேண்டும்.
 
• வேப்பம்பூவை சிறிது நெய்விட்டு நன்கு வதக்கி அதில் புளி கரைசலை சேர்த்து கலந்து விடவும்.
 
• கடுகு, காய்ந்தமிளகாய் இரண்டையும் சேர்த்து தாளித்து வேப்பம்பூவில் விடவும்.
 
• புளிக்கு பதிலாக வேக வைத்த மாங்காயில் வெல்லம் கலந்தும் செய்யலாம்.
 
• சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த சத்தான உணவாகும்.




 
 
Copyright © யாழ் மண்கும்பான்
Blogger Theme by BloggerThemes Design by Diovo.com