பொன்னாங்கண்ணி கீரை சூப்

width="200"


தேவையான பொருட்கள்:    
 
பொன்னாங்கண்ணி கீரை – ஒரு கட்டு    
வல்லாரை  – அரை கட்டு    
தனியா – ஒரு டீஸ்பூன்    
உப்பு – தேவையான அளவு    
இஞ்சி – ஒரு துண்டு    
மிளகு – அரை டீஸ்பூன்
 
செய்முறை:    
 
• இஞ்சியைக் கழுவி தோல் சீவி துருவிக் கொள்ளவும்.
 
• பொன்னாங்கண்ணி கீரை, வல்லாரையை நன்கு கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
 
• மிளகை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும்.
 
• ஒரு டம்ளர் தண்ணீரில், துருவிய இஞ்சி, உப்பு, மிளகு ஆகியவற்றைப் போட்டு கொதிக்கவிடவும்.    
 
• நன்கு கொதிக்கும்போது கீரைகளைப் போட்டுவிட்டு, அடுப்பை அணைத்துவிடவும். 5 நிமிடம் மூடிவைத்து விட்டால், கீரைகளின் சாறு கொதிநீரில் இறங்கிவிடும். வடிகட்டிவிட்டு அந்த சூப்பை பருகலாம்.
 
• இந்த சூப் மிகவும் சத்தானது.


 
 
Copyright © யாழ் மண்கும்பான்
Blogger Theme by BloggerThemes Design by Diovo.com