கேரட் தயிர் பச்சடி

width="200"


தேவையான பொருள்கள்:    
 
கேரட் - அரை கிலோ    
தயிர் - 2 கப்    
உருளைக்கிழங்கு - 100 கிராம்    
வெங்காயம் - 50 கிராம்    
பச்சை மிளகாய் - 4    
இஞ்சி - சிறு துண்டு    
கடுகு - அரை ஸ்பூன்    
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்    
எண்ணெய் - 1 ஸ்பூன்    
உப்பு - தேவையான அளவு
 
செய்முறை:    
 
• கேரட்டை பொடியாக துருவிக் கொள்ளவும்.
 
• உருளைக்கிழங்கை சிறிது மஞ்சள் பொடி சேர்த்து குக்கரில் வேக வைத்து உரித்து மசித்துக் கொள்ளவும்.    
 
• வெங்காயம், பச்சை மிள்காய், இஞ்சியை பொடியாக நறுக்கவும்.   
 
• வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அதனோடு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.   
 
• ஒரு பாத்திரத்தில் துருவிய கேரட், மசித்த உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து தயிர் சேர்த்து கிளறிக் கொள்ளவும்.    
 
• தாளித்ததை இந்த கலவையில் கொட்டி கொத்தமல்லி சேர்த்து கிளறி பரிமாறவும்.
 
• சுவையான கேரட் தயிர் பச்சடி தயார். இதை எல்லா விதமான ரைஸோடும், சப்பாத்தி, நூடுல்ஸ் ஆகியவற்றோடு பரிமாறலாம்.



 
 
Copyright © யாழ் மண்கும்பான்
Blogger Theme by BloggerThemes Design by Diovo.com