வெள்ளரிக்காய் தயிர் சாலட்

width="200"


தேவையான பொருட்கள்......

வெள்ளரி கால் - கிலோ
தயிர் - இரண்டு கப்
கேரட் - 1
வெங்காயம் - 1 பெரியது
எலுமிச்சை சாறு - ஒரு ஸ்பூன்
உப்பு-தே.அளவு
மிளகுத்தூள்-தே.அளவு

செய்முறை....


• கேரட், வெள்ளரியைத் துருவிக் கொள்ளவும்.

• வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• புளிக்காத கெட்டித் தயிர், துருவிய கேரட், பொடியாக நறுக்கிய வெங்காயம், எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் தேவையான அளவு அனைத்தையும் ஒன்றாக சேர்த்துக் கலக்கி கொத்தமல்லித் தழை தூவி சாப்பிடலாம்.

• உணவுக்குப் பின்னர் எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் வெப்பத்தை தடுக்கும். அடிக்கடி தாகம் ஏற்படுவது தடுக்கப்படும். தோல் எரிச்சல் போன்ற வெயில் தொந்தரவுகளில் இருந்து தப்பிக்கலாம்.




 
 
Copyright © யாழ் மண்கும்பான்
Blogger Theme by BloggerThemes Design by Diovo.com