அருநெல்லிக்காய் ரசம்

width="200"


தேவையான பொருள்கள்:

அருநெல்லிக்காய் - முக்கால் கப் 
மிளகு - 1 ஸ்பூன் 
மிளகாய் வற்றல் - 2
தனியா - 1 ஸ்பூன் 
மஞ்சள் பொடி - சிறிது
சீரகம் - அரை ஸ்பூன்
பெருங்காயம் - அரை ஸ்பூன்
புளி - சிறிது 
கடுகு - அரை ஸ்பூன்
 எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை:

* அருநெல்லிக்காயை கழுவி விட்டு கொட்டையோடு மிக்ஸியில் போட்டு அதனோடு மிளகாய் வற்றல், தனியா, சீரகம், மிளகு, பெருங்காயம், புளி ஆகியவற்றை சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.

• இதை 6 கப் தண்ணீரில் கரைத்து தேவையான அளவு உப்பு, சிறிது மஞ்சள் பொடி கலக்கவும்.

• கடாயில் எண்ணெய் காய விட்டு கடுகு, கறிவேப்பிலை கொத்தமல்லி தாளித்துச் சேர்க்கவும்.

* சுவையான நெல்லிக்காய் ரசம் தயார். இதை ரைஸோடும் பரிமாறலாம். சூப் போலவும் குடிக்கலாம். குடிப்பதற்கு என்றால் காரத்தைக் குறைத்துக் கொள்ளவும்




 
 
Copyright © யாழ் மண்கும்பான்
Blogger Theme by BloggerThemes Design by Diovo.com