ஆப்பிள் சூப்

width="200"


தேவையான பொருட்கள்....
 
ஆப்பிள் -1  
தக்காளி -2  
பால் -1கப்
மிளகுத் தூள் - 1 ஸ்பூன்
சீரகத்தூள் - 1 ஸ்பூன்
மைதா மாவு - 2 ஸ்பூன்  
எண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு - 1/4 ஸ்பூன்  
எலுமிச்சம் பழம் - 1/2 மூடி  
பெருங்காயத்தூள் - சிறிதளவு
கொத்தமல்லித்தழை- சிறிதளவு
கருவேப்பிலை,உப்பு தேவைக்கேற்ப.
 
செய்முறை....
 
• ஆப்பிலை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
 
• தக்காளியை வேக வைத்து தோல் நீக்கிக்கொள்ளவும்.
 
• மைதா மாவை வறுத்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க விடவும்.
 
• துருவிய ஆப்பிளை பாலில் வேகவைத்து தக்காளியுடன் சேர்த்து அரைக்கவும்.
 
• அரைத்த விழுதை கொதிக்க விடவும்.
 
• வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தளித்து பெருங்காயத்தூள், கருவேப்பிலை, சீரகத்தூள், மிளகுத் தூள், சேர்த்து வதக்கி சூப்பில் கொட்டி இறக்கவும்.
 
• இறக்கியதும் எலுமிச்சைச் சாறு, உப்பு, நறுக்கிய கொத்தமல்லித்தழைத் தூவி சேர்க்கவும். 
 
இதோ அருமையான ஆப்பிள் சூப் தயார்.




 
 
Copyright © யாழ் மண்கும்பான்
Blogger Theme by BloggerThemes Design by Diovo.com