தக்காளி தயிர் பச்சடி

width="200"


தேவையான பொருட்கள்:

தக்காளி – 2
தயிர் – 2 கப்
பச்சைமிளகாய் – 2    
புதினா – சிறிது
இஞ்சி – சிறு துண்டு
நல்லெண்ணெய்- 1 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்.
சீரகம் – 1 டீஸ்பூன்    
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
உப்பு – 1 டீஸ்பூன்

செய்முறை:

* தக்காளியை நடுத்தரத் துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். 

* தயிரை நன்றாகக் கடைந்துக் கொள்ளவும்.

* இஞ்சி, பச்சைமிளகாய், புதினா ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அத்துடன் பெருங்காயத்தூள், நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், புதினா சேர்த்து சிறிது வதக்கவும். பின்னர் அதில் தக்காளித் துண்டுகளைப்போட்டு சற்று கிளறி சிறு தீயில் மூடி வைத்து ஒரு நிமிடம் வேகவிடவும். (குழைய விடக்கூடாது).    

• வெந்த தக்காளியை தயிரில் சேர்த்து, உப்பு போட்டு கலக்கவும்.

• பச்சை கொத்துமல்லி அல்லது சிறிது புதினா தழையைத் தூவி பரிமாறவும்





 
 
Copyright © யாழ் மண்கும்பான்
Blogger Theme by BloggerThemes Design by Diovo.com