தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் – 2 மேசைக்கரண்டி
வேகவைத்த பருப்பு தண்ணீர் – 2 டம்ளர் காரட்,பீன்ஸ்,கோஸ்,காளிபிளவர்,ப.பட்டாணி -தலா 25 கிராம்
பச்சை மிளகாய் -1
இஞ்சி – சிறிது
உப்பு - தேவையான அளவு
மிளகு தூள் -1தேக்கரண்டி
செய்முறை:
• ப.மிளகாய், காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• இஞ்சியை துருவிக் கொள்ளவும்.
* குக்கரில் வேகவைத்த பருப்புத் தண்ணீருடன் ஓட்ஸ், இஞ்சி, நறுக்கிய காய்கறிகள் அனைத்தையும் போட்டு வேகவைக்க வேண்டும்.
* பின்பு அதை மத்தினால் கடைந்து, தேவையான தண்ணீர் சேர்த்து வடிகட்டி கொதிக்க விடவும்.
* ஒரு கொதி வந்தவுடன் உப்பு மற்றும் மிளகு தூள் தூவி இறக்கி பரிமாறவும்.