பேபிகார்ன் சப்பாத்தி

width="200"


 
தேவையானவை:
 
துருவிய பேபிகார்ன் – கால் கப்
கோதுமை மாவு – ஒரு கப்
 பொடியாக நறுக்கிய குடமிளகாய், பச்சை மிளகாய் – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
 
செய்முறை:
 
• துருவிய பேபிகார்னுடன், குடமிளகாய், பச்சை மிளகாய், உப்பு, கோதுமை மாவு சேர்த்து கெட்டியாகக் கலந்து, தண்ணீர் தெளித்து பிசைந்து, சப்பாத்திகளாக இடவும்.
 
* காயும் தோசைக்கல்லில் சப்பாத்திகளைப் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.





 
 
Copyright © யாழ் மண்கும்பான்
Blogger Theme by BloggerThemes Design by Diovo.com