பூசணிக்காய் பச்சடி

width="200"


தேவையான பொருட்கள்...

வெள்ளை பூசணிக்கீற்று - 1
புளிக்காத கெட்டித் தயிர் - 1 கப்
இஞ்சி - 1 துண்டு
பச்சை மிளகாய் - 2
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.

செய்முறை...

• பூசணியை தோல் நீக்கி, பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள்.

• சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரில் இரண்டு விசில் வைத்து இறக்குங்கள்.

• பச்சை மிளகாய், இஞ்சியை நன்றாக அரைத்து, பூசணித் துண்டுகளுடன் சேருங்கள்.

• அத்துடன் தயிரை கெட்டியாக சேர்த்து சீரகத்தூள் தூவி பரிமாறுங்கள்.

குறிப்பு: பூசணிக்காயைத் துருவி ஸ்டீம் செய்தும் பச்சடி செய்யலாம்.




 
 
Copyright © யாழ் மண்கும்பான்
Blogger Theme by BloggerThemes Design by Diovo.com