முளை கட்டிய பயறு சூப்

width="200"


தேவையான பொருட்கள்:

முளை கட்டிய பச்சை பயறு - 1 க‌ப்
தக்காளி - 1
வெங்காயம் - 1
இஞ்சி, பூண்டு விழுது - ‌‌1 ஸ்பூன் ‌
மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 ஸ்பூன்
பு‌‌தினா இலை - சிறிதளவு

செய்முறை:

• பயறை ஆவியில் வேக வைத்து, மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.

• வெங்காயம், தக்காளியையு‌ம் அரைத்து வைத்துக் கொள்ளவும்.

• அதே போல் இஞ்சி, பூண்டு விழுது அரைத்துக் கொள்ளவும்.

• எண்ணெயைக் காயவைத்து அதில் வெங்காயம், தக்காளி விழுது போட்டு வதக்கி, அதனுடன் இஞ்சி, பூண்டு விழுதையும் சேர்‌த்து வத‌க்கவு‌ம்.

• அரைத்த பயறை இதனுடன் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். பரிமாறும் போது தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள், பு‌‌தினா இலை சேர்த்துக் கொள்ளவும்.




 
 
Copyright © யாழ் மண்கும்பான்
Blogger Theme by BloggerThemes Design by Diovo.com