தேவையானவை:
பழுத்தத் தக்காளி - 5
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு,
தேன் - சிறிதளவு.
செய்முறை:
• தக்காளிப் பழம், மிளகு, சீரகம், உப்பு எல்லாவற்றையும் சிறிது தண்ணீர் விட்டு நன்கு அரைத்து, வடிகட்டி, ஃப்ரிட்ஜில் வைத்து, குளிர்ந்த பிறகு தேன் கலந்து பருகலாம்.
குறிப்பு: குட்டீஸ்களுக்கு தருவதானால்... மிளகு, சீரகம், உப்பு சேர்க்காமல், சர்க்கரை மட்டுமே கலந்து கொடுக்கலாம்.