ச‌த்துமாவு‌‌க் க‌‌ஞ்‌சி

width="200"


தேவையானவை....

பார்லி, கோதுமை, சோளம் தலா - 100 ‌கிரா‌ம்
தினை, கம்பு, கேழ்வரகு - 100 ‌கிரா‌ம்
பாதாம்பருப்பு, முந்திரிப்பருப்பு - 20
சோயா, கொள்ளு - தலா 100 ‌கிரா‌ம்
பால் - ஒரு டம்ளர்
வெல்லம் - தேவையான அளவு.

செய்முறை.....

* பார்லி, கோதுமை, சோளம், தினை, கம்பு, கேழ்வரகு, பாதாம்பருப்பு, முந்திரிப்பருப்பு, கொள்ளு, சோயா எல்லாவற்றையும் தனித்தனியாக சுத்தம் செய்து வெறும் கடாயில் ஒவ்வொன்றையும் தனித்தனியாக வறுத்து ஆற வைத்து அரை‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

• ஒருவரு‌க்கு 4 தே‌க்கர‌ண்டி மாவை ஒரு பா‌த்‌திர‌த்‌தி‌ல் போ‌ட்டு 2 டம்ளர் த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி க‌ட்டி‌யி‌ல்லாம‌ல் ந‌ன்கு கரை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

• பாத்திரத்தை அடுப்பில் வைத்து மிதமான தீயில் கிளறிகொண்டே இருக்கவும். ஈரக் கையில் கஞ்சியைத் தொடும்போது கையில் ஒட்டாத பதத்துக்கு வந்ததும் இறக்கவும்.

• பின்பு, கொதிக்க வைத்து ஆறிய பால், பொடித்த வெல்லம் சேர்த்துக் கலந்து குடிக்கலாம்.

• இ‌ந்த க‌‌ஞ்‌சியை குழ‌ந்தைக‌ள் முத‌ல் பெ‌ரியவ‌ர்க‌ள் வரை யா‌ர் வே‌ண்டுமானாலு‌ம் அரு‌ந்தலா‌ம். உடலு‌க்கு ‌மிகவு‌ம் ந‌ல்லது.




 
 
Copyright © யாழ் மண்கும்பான்
Blogger Theme by BloggerThemes Design by Diovo.com