தேவையானவை....
கோதுமை மாவு - 2 கப்
பழுத்த தக்காளி - 3
மிளகாய்ப் பொடி - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - சிறிது
எண்ணெய் - 2 ஸ்பூன்
செய்முறை....
• தக்காளியை அரைத்து அதனுடன் மிளகாய்ப் பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
• கோதுமை மாவில் இந்த கலவையைப் போட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து, அரை மணி நேரம் ஊற விடுங்கள்.
• பிறகு தேவையான அளவுகளில் சப்பாத்திகளாக இட்டு தோசைத் கல்லில் வேகவைத்து எடுக்கவும்